ஐப்பசி பெளர்ணமி ... அன்னாபிஷேகம்... கிரிவலம்... தஞ்சையிலும், திருவண்ணாமலையிலும் குவிந்த பக்தர்கள்!
Dinamaalai November 15, 2024 02:48 PM

இன்று ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தை முன்னிட்டு தஞ்சையில் அன்னாபிஷேகம் காணவும், திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனார். தமிழகம் முழுவதும் சிவன் கோவில்கள் நேற்றில் இருந்தே அலங்காரத்தினாலும், அபிஷேகத்தினாலும் களைகட்ட துவங்கின. இன்று நவம்பர் 15ம் தேதி ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தை முன்னிட்டு விருதுநகர்  மாவட்டம் சதுரகிரியிலும், திருவண்ணாமலையிலும் கிரிவலம் செல்வதற்காக பக்தர்கள் குவிந்தனர். அதே போன்று ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தையொட்டி அனைத்து சிவன் கோவில்களிலும் இன்று மாலை அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அன்னாபிஷேகத்தைக் காண்பதற்காகவும் தஞ்சை பெரிய கோவிலும் பக்தர்கள் குழுமியுள்ளனர். டன் கணக்கில் காய்கறிகளாலும், அன்னத்தாலும் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. 

ஒவ்வொரு மாத பெளர்ணமி தினத்தன்றும் கிரிவலம் செல்ல தமிழகம் முழுவதுமிருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து குவிகின்றனர். இந்நிலையில், ஐப்பசி  மாத பெளர்ணமி அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது என்பதால் நேற்று மாலை முதலே பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். இன்று அதிகாலை 3 மணிக்கு பெளர்ணமி துவங்கிய நிலையில் பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர்.

அதே போன்று, தஞ்சை பெரிய கோவிலிலும், அன்னாபிஷேக தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்தனர். இன்று அதிகாலை பெளர்ணமி துவங்கியதில் இருந்து அன்னாபிஷேகத்தைக் காண நேற்று வந்திருந்தவர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர். ஐப்பசி மாத பௌர்ணமி இன்று நவம்பர் 15ம் தேதி அதிகாலை 3 மணிக்கு துவங்கி நாளை அரை நீடிக்கிறது. எனவே கிரிவலம் வருவதற்காக அதிகாலை முதலே பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். 

அதே போன்று திருவண்ணாமலை, தஞ்சாவூர் மட்டுமல்லாது சதுரகிரி மலையேறவும் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். ஐப்பசி மாதத்தில் சிவ தரிசனம் மேன்மை தரும் என்பதால், ராமேஸ்வரத்திலும் பக்தர்கள் இன்று அதிகாலை முதலே அதிகளவில் தரிசனத்திற்காக வந்திருந்தனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.