அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்க தயாரா என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்டிருந்தார். அதாவது மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கலைஞர் கருணாநிதியின் பெயரை மட்டுமே வைப்பது இந்த அரசு நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அப்படி கலைஞர் ர் பெயரை வைப்பதாக இருந்தால் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய அறக்கட்டளை மூலம் இந்த பணிகளை மேற்கொள்ளட்டும் என்றும் கூறினார். ஆனால் தமிழ் வளர்ச்சிக்காகவும் மக்களுக்காகவும் உழைத்த கருணாநிதியின் பெயரை மக்களுக்கு வைக்காமல் பதவிக்காக கரப்பான் பூச்சியை போல ஊர்ந்து சென்றவரின் பெயரையா வைக்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்தார்.
அதே நேரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக ஆட்சி நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் திமுக ஆட்சி நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து நேரடியாக விவாதிக்க தயாராக இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டால் விவாதத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார். இதற்கு ஆர்.பி உதயகுமார் பதிலடி கொடுக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலினுடன் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அமைச்சர் எ.வ வேலு எடப்பாடி பழனிசாமி சவாலுக்கு அழைத்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது ஒரே மேடையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து தன்னுடன் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரே மேடையில் விவாதிப்பது தொடர்பான விஷயம் மேலும் மேலும் சூடுபிடிப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.