அதிர்ச்சி... ஒரேயடியாய் 17,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது போயிங் நிறுவனம்!
Dinamaalai November 15, 2024 12:48 PM

ஒரே நேரத்தில் சுமார் 17,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறது போயிங் கோ நிறுவனம். தனது நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை ஏற்கெனவே போயிங் நிறுவனம் தொடங்கி இருப்பதாக தெரிகிறது. உலகம் முழுவதும் பல நாடுகள் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், கொரோனா காலத்திற்குப் பிறகு பன்னாட்டு நிறுவனங்களும், பெரு நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் சதவீதத்தை அதிரடியாக அவ்வப்போது குறைத்து வருகின்றன. இந்நிலையில், போயிங் நிறுவனத்தில் இந்த லிஸ்ட் மிக பெரிதாக இருக்கிறது. தனது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் நிறுவனத்தின் அனைத்து தகுதிகளில் இருக்கும் ஊழியர்களின் லிஸ்ட் இடம்பெற்றிருப்பதாகவும், நேற்று முதலே தனது ஊழியர்கள் பணி நீக்க முதல்கட்ட நடவடிக்கையை நிறுவனம் தொடங்கி விட்டதாகவும், பணியில் இருந்து நீக்கப்படவிருக்கும் ஊழியர்களுக்கு பிங்க் சிலிப் எனப்படும் நோட்டீஸ் வழங்கும் நடவடிக்கை நிறுவனத்தில் தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒருபக்கம் திறமையான ஊழியர்களுக்கு வாய்ப்பு அளிப்பது மற்றும் திறமையான பணியாளர்களை அதிகப்படுத்துவது ஆகிய நடவடிக்கையின் காரணமாக இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த மாதமே போயிங் நிறுவனம் 10 சதவீத ஆட்குறைப்பில் ஈடுபடவிருப்பதாக அறிவித்திருந்தது. இந்த 10 சதவீதம் என்பது கிட்டத்தட்ட நிறுவனத்தில் இருந்து 17,000 ஊழியர்கள் நீக்கப்பட இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. 

கடந்த ஜனவரி மாதத்தில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து போயிங் விமானம் சந்தித்த விபத்துகள், ஊழியர்களின் தொடர்ந்து 7 வார கால வேலை நிறுத்த போராட்டம், பொருளாதார சிக்கல் உள்ளிட்ட பல காரணங்களால் நிறுவனம் இந்த ஆட்குறைப்புக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.