சென்னை கிண்டியில் பணியில் இருந்த புற்றுநோய் பிரிவு சிறப்பு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் விக்னேஷ் (25) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்கு கிட்டத்த 7 இடங்களில் கத்தி குத்து விழுந்த நிலையில் தலையில் ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. அவர் கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
இந்த மருத்துவமனையில் பிரேமா என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய மகன்தான் விக்னேஷ். இவர் தன் தாயாருக்கு மருத்துவர் பாலாஜி சரியான முறையில் சிகிச்சை வழங்கவில்லை எனவும் தன் தாயை திட்டியதாகவும் அதனால் தான் அவரை கத்தியால் குத்தியதாகவும் கூறியுள்ளார்.
தன்னுடைய தாய்க்கு சரியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை எனவும் அளிக்கப்பட்ட மருத்துவ உதவிகள் குறித்த தகவல்களை தன்னிடம் தெரிவிக்கவில்லை எனவும் விக்னேஷ் கூறியதோடு மருத்துவர் பாலாஜியிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு திடீரென அவரை கத்தியால் குத்திவிட்டார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணியில் இருக்கும் போது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு 10 வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
கடந்த வருடம் மத்திய அரசு ஐபிசி சட்டத்திற்கு பதில் புதிதாக பிஎன்எஸ் சட்டப்பிரிவுகளை உருவாக்கி அனைத்து விதமான குற்றங்களுக்கும் தண்டனையை கடுமையாக்கியுள்ளது. இதில் விக்னேஷ் மீது பிஎன்எஸ் சட்டம் பாய்ந்துள்ள நிலையில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக விக்னேஷுக்கு ஜாமீன் கிடைக்காத பட்சத்தில் 10 வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.