நியூசிலாந்து அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளரான டிம் சௌத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார்.
2008 ஆம் ஆண்டு தன்னுடைய 19வது வயதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டிம் சௌத்தி அறிமுகமாகி இருக்கிறார். நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அணியின் கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார். இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் டிம் சௌத்தி, 385 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
Tim Southeeஒருநாள் போட்டிகளில் 200-க்கும் அதிகமான விக்கெட்களையும், டி-20 போட்டிகளில் 100-க்கும் அதிகமான விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். உலக அளவில் இந்த மைல்கல் சாதனையை செய்த ஒரே பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார் டிம் சௌத்தி. இந்நிலையில் 35 வயதுடைய டிம் சௌத்தி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். ஹாமில்டன் நகரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி நடைபெற இருக்கிறது. அந்தப் போட்டியுடன் ஓய்வுப் பெற இருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...