Bigg Boss Tamil Season 8 Day 39 இல் பிராங்கினால் ஏற்பட்ட வாக்குவாதம் இன்னும் நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொருவரும் தனித்தனி தாக்குதல் செய்வது போல இருக்கிறது. ஏற்கனவே நடந்த பிரச்சனைகளை மனதில் வைத்து பேசுவது போல் இருக்கிறது. ஒருவருக்கொருவர் விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் இப்படி சீரியஸாக எடுத்து சொல்கிறார்களே என்று தோன்றியது.
அடுத்ததாக குழந்தைகள் தினம் கொண்டாட போவதாக கூறி மாணவர்களுக்காக ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சி நடத்துவது போல் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் மஞ்சரி பாட்டு பாடியது சிவகுமாரின் பெர்ஃபார்மன்ஸ் எல்லாமே நன்றாக இருந்தது.
அடுத்ததாக ஜாக்குலின் மாரால் சயின்ஸ் கிளாஸில் எப்படி பாடம் எடுத்தார் என்பதை பற்றி கம்பளைண்ட் பிரின்ஸ்பல்க்கு சென்றது. அதை கூப்பிட்டு விசாரிக்கும் போது பர்சனல் வென்சென்சை வைத்துவிட்டு தான் ஒவ்வொருவருக்கும் மாரால் சொல்லிக் கொடுத்தீர்கள் என்று அருண் ஜாக்குலின் இடம் வாக்குவாதம் செய்தார்.
குறிப்பாக தீபக்கு support செய்வது போல் பேசினார். அது ஜாக்குலினுக்கு கொடுக்கப்பட்டது பிக் பாஸ் இன் டாஸ்க் தான் என்பது பலருக்கும் புரியவில்லை. தன்னால் முடிந்த அளவு பேசி போராடி பாத்த ஜாக்குலின் தீபக்கை கூப்பிட்டு காலில் தொட்டு கும்பிட்டு என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி பயங்கரமாக அழுதுவிட்டார். அது பார்ப்பதற்கு சற்று பாவமாக இருந்தது.
இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களில் பள்ளிக்கூடம் டாஸ்க் மிகவும் ஜாலியாக தான் போயிருக்கிறது. இந்த முறை ஏனோ இது பள்ளிக்கூடம் டாஸ்க் மாதிரியே தெரியவில்லை. சீரியஸாகவே எல்லோரும் பண்ணியது போல் தான் இருந்தது. மாணவர்களுக்கு ரேங்க் கொடுப்பது போன்ற டாஸ்க் நடைபெற்றது. அதில் முத்து சாச்சனா ராயன் முதல் 3 இடங்களை பிடித்தனர். இனி நாளை டாஸ்க் eviction free பாஸ் டாஸ்க் நடைபெற இருக்கிறது. அதில் ஆண்கள் ஜெயிப்பார்களா பெண்கள் ஜெயிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.