“மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு” குற்றவாளிகளை விடுவித்தது ஏன்..? உச்சநீதிமன்றம் கேள்வி…!!!
SeithiSolai Tamil November 16, 2024 02:48 AM

கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சொத்து தகராறில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா என்பவர் கூலிப் படையினரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மருத்துவர் சுப்பையாவின் உறவினரான பொன்னுசாமி, அவருடைய மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், பேசிலன் மற்றும் நண்பர்கள் வில்லியம்ஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் கூலிப்படையை சேர்ந்த இயேசு ராஜன், முருகன், செல்வ பிரகாஷ், ஐயப்பன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ஐயப்பன் என்பவர் அப்ரூவர் ஆகினார். இந்த வழக்கில் கடந்த 2015இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 2017ல் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. இந்நிலையில் வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க சுப்பையாவின் உறவினராக மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

ஆகவே இதனை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கை 2021 ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டது. அதன்படி விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கிய அமர்வு நீதிமன்றம் பொன்னுசாமி,மேரி புஷ்பம், வில்லியம்ஸ், ஏசு ராஜன், போரிஸ்,ஜேம்ஸ் சதீஷ்குமார், செல்வா பிரகாஷ்,முருகன்,பேசில் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.இதில் பொன்னுச்சாமி, பாஸில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ் முருகன், செல்வ பிரகாஷ் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், மேரி புஷ்பம், இயேசு ராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதே வேளையில் அப்ரூவரான ஐயப்பன் அரசு சாட்சி என்பதால் அவருக்கு தண்டனை விரிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து குற்றவாளிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். பின்னர் விசாரணை எம் .எஸ் ராஜேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு குற்ற சாட்டப்பட்ட 9 பேர் மீதான குற்றசாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை என கூறியதோடு, அவர்களை விடுவித்து தீர்ப்பு வழங்கி இருந்தனர்.

இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது உச்ச நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி எம் திரிவேதி தலைமையிலான அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது. இது குறித்து கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் பட்டர் பகலில் மிகப் படு பயங்கரமாக நடந்த ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் சென்னை உயர்நீதிமன்றம் எவ்வாறு விடுத்தது. இதுபோன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. வழக்கில் போதுமான ஆதாரங்கள் இருப்பதால்தான் விசாரணை நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியிருந்தது ஆனால் அதை மாற்றியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்தது எப்படி என புரிந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் மனு தொடர்பாக குற்றவாளிகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.