மும்பை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது பெண்களுக்கு 18 வயது ஆவதற்கு முன்பாக அவர்கள் சம்பந்தத்துடன் உடலுறவு கொண்டாலும் அது பாலியல் பலாத்காரம் தான் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக சிறுமி ஒருவருக்கு ஆசை காட்டியுள்ளார். பின்னர் அந்த சிறுமியுடன் அவர் பலமுறை உல்லாசமாக இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை சிறுமி உணர்ந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அந்த நபர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு மாவட்ட நீதிமன்றம் 10 வருடங்கள் சிறைத் திறனை விதித்து தீர்ப்பு வழங்கிய நிலையில் அதனை எதிர்த்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் பெண்ணுக்கு 18 வயது ஆவதற்கு முன்பாக அவரின் சம்பந்தத்துடன் உடலுறவு கொண்டாலும் அது பாலியல் பலாத்காரம் தான் என்று தீர்ப்பு வழங்கினார். மேலும் அவருக்கு வழங்கப்பட்ட 10 வருட சிறை தண்டனையையும் உறுதிப்படுத்தினார்.