UP: இடது கண்ணுக்கு பதில் வலதுபுறத்தில் அறுவை சிகிச்சை - 7 வயது சிறுவனுக்கு நடந்த கொடுமை!
Vikatan November 16, 2024 06:48 AM

உத்தரப்பிரதேசம் மாநிலம், மேற்கு கிரேட்டர் நொய்டோவில் உள்ள வணிகம் மற்றும் குடியிருப்பு பகுதி காமா 1.

இந்த பகுதியிலிருக்கும் ஆனந்த் ஸ்பெக்ட்ரம் மருத்துவமனையில் நவம்பர் 12-ம் தேதி, 7 வயது சிறுவனிற்கு கண்ணில் அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது .

சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் பொழுது தான் அந்த சிறுவனின் தாயார் சிகிச்சை தவறான கண்ணில் நடந்துள்ளதை பார்த்துள்ளார்.

யுதிஷ்டிர் என்ற 7 வயது சிறுவனிற்கு இடது கண்ணில் அடிக்கடி கண்ணீர் வருகிறது என அந்த மருத்துவமனையில் காண்பித்த போது, சிறிய பிளாஸ்டிக் போன்ற துரும்பு கண்ணில் உள்ளது. அதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம் என்று கூறியுள்ளனர்.

ஆபபரேஷனுக்கு சம்மதம் தெரிவித்து ₹45,000 கட்டணத்தை மருத்துவமனையில் செலுத்தியுள்ளார் சிறுவனின் தந்தை நிதின் பாத்தி.

அறுவை சிகிச்சை தவறான கண்ணில் நடந்துள்ளது குறித்துப் பேச உடனடியாக மருத்துவமனையை சென்றடைந்த சிறுவனின் குடும்பத்தினர் மருத்துவர்களிடம் முறையிட்டுள்ளனர். அதற்கு அங்கிருந்த மருத்துவர் மற்றும் ஊழியர்கள் சண்டையிட்டுள்ளனர்.

இதனால் கௌதம் புத்தா நகரில் உள்ள தலைமை மருத்துவ அதிகாரியிடம் (CMO- Chief Medical Officer) யுதிஷ்டிரின் தந்தை நிதின் அந்த மருத்துவரின் மருத்துவ உரிமம் (doctor license) ரத்து செய்யப்பட்டு ஆனந்த் ஸ்பெக்ட்ரம் மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

விசாரணை ஆரம்பிக்கப் பட்டுள்ளது, விரைவில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.