அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 120 கோடி ரூபாய் மதிப்புள்ள 53 திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும் 82 கோடி 57 முடிவுற்ற திட்ட பணிகளையும் திறந்து வைத்துள்ளார். அதன் பிறகு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தில் இதுவரை 572 கோடி முறை பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். உழைக்கும் மக்களுக்கு உறுதுணையாகவும், அவர்கள் பொருளாதார ரீதியாகவோ உயரவும் அடித்தளம் அமைக்கும் திட்டமாக இந்த திட்டம் உள்ளது என முதலமைச்சர் பேசியுள்ளார்.