எல்மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த விஜயின் மனைவி துர்கா தேவி பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரசவத்தின் போது துர்கா தேவி உயிரிழந்தார். தாய் இறந்த 3 நாட்களுக்குப் பிறகு குழந்தை தர்மபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக குழந்தையும் உயிரிழந்தது.
தாய் சேய் உயிரிழந்த நிலையில் மாவட்ட ஊரக நல பணி மற்றும் மருத்துவத் துணை இயக்குனர் கண்ணகி விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சியாமளா திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.