BLINK: இந்த வாரம் போட்டியில் புதிய தமிழ் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும் வார இறுதியில் நீங்கள் பார்த்து ரசிக்க வித்தியாசமான சயின்ஸ் பிக்சன் கதையான பிளிங்க் திரைப்படத்தை மிஸ் செய்யாமல் பார்த்துவிடுங்கள்.
புது முக இயக்குனரான ஸ்ரீநிதி பெங்களூர் என்பவர் எழுதியிருக்கும் திரைப்படம் தான் ப்ளிங்க். கன்னட மொழியில் வெளிவந்த இப்படம் முதல் நாளிலிருந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. திரையரங்குகளில் தொடர்ச்சியாக 50 நாள் ஓடி சாதனை புரிந்தது.
இதையும் படிங்க:
இப்படத்தில் அபூர்வா என்னும் கேரக்டரில் தீக்ஷித் ஷெட்டி நடித்து இருக்கிறார். சயின்ஸ் பிக்சன் கதை என்பதால் படத்தில் ஏகப்பட்ட மந்திரங்கள் மாயங்கள் இருக்கும் என எதிர்பார்த்தால் அதுதான் இல்லை. ரொம்பவே சாதாரணமான கதையில் பிரம்மாண்டத்தை திரைக்கதையில் கொடுத்து அசத்தி இருக்கின்றனர்.
அபூர்வா என்னும் இளைஞன் தன்னுடைய அம்மாவிடம் பிரிந்து வந்து தனியாக வசித்து வருகிறார். நாடக குழுவில் இருக்கும் இவருக்கும், சொப்னா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. அபூர்வாவிற்கு தொடர்ந்து 30 நிமிடங்களை சிமிட்டாமல் இருக்கும் அபூர்வமான பழக்கம் இருக்கிறது.
இதையும் படிங்க:
இப்படி இருக்கும்போது திடீரென ஒரு நாள் அவர் தன்னுடைய உருவத்தையே நேரில் பார்க்கிறார். ஒரு வயதானவரும் அபூர்வாவை தொடர்ந்து கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் அபூர்வா அந்த வயதானவருடன் பேச தந்தையின் இறப்பை பற்றி தெரிந்து கொள்ளலாம் எனக் கூறி டைம் டிராவல் செய்யும் மருந்தை கொடுக்கிறார்.
ஒரே நேரத்தில் அபூர்வா உடன் இன்னொரு கதையும் பயணமாகிறது. அவர் யார்? எதற்காக வயதானவர் அபூர்வாவை தேர்வு செய்தார். இன்னொரு காலத்தில் இருக்கும் அந்த தம்பதி என்ன ஆனார்கள் என ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.
அமேசான் பிரைம் ஓடிடியில் இருக்கும் பிளிங்க் திரைப்படம் தமிழ் மொழியிலும் இருக்கிறது. சமீபத்தில் வெளியான பிளாக் திரைப்படத்தை பார்க்க பலருக்கும் இத்திரைப்படமும் சுவாரசியமாக இருக்கும் என்பதால் இந்த வாரம் மறக்காமல் பார்த்து விடுங்கள்.