Kanguva: கங்குவா திரைப்படம் நேற்று உலகம் எங்கும் வெளியான நிலையில் முதல் சில காட்சிகளை தவிர தொடர்ந்து அப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சசனங்களே குவிந்து வருகிறது.
ஸ்டுடியோ கிரீன்ஸ் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் கங்குவா. இப்படத்தில் சூர்யா, பாபி தியோல், திசா பதானி, ரெடின் கிங்ஸ்லி, கலைவாணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக கங்குவா உருவாக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:
சூர்யா நடிப்பில் 980 நாட்களைக் கடந்து கங்குவா திரைப்படம் கோலிவுட் மட்டுமல்லாது பல மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. முதன்முறையாக நடிகர் சூர்யாவின் திரைப்படம் வட இந்தியாவில் மிகப்பெரிய எண்ணிக்கையில் வெளியிடப்பட்டிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இப்படம் தமிழில் முதல் பிரம்மாண்ட படைப்பாக வரவேற்பு பெறும். 2000 கோடி வரை வசூலை தட்டி எடுக்கும் என பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். இத்தகைய எதிர்பார்ப்புடன் நேற்று கங்குவா வெளியாகி மோசமான விமர்சனங்களை குவித்து வருகிறது.
இப்படத்திற்காக நடிகர் சூர்யா கடினப்பட்டு உழைத்திருக்கிறார். ஆனால் அப்படம் அவருடைய உழைப்பிற்கு சரியான படமாக கங்குவா அமையவில்லை. படத்தில் தேவையே இல்லாத நிறைய சண்டைக் காட்சிகள் இருப்பதாகவும், படம் முழுவதும் கதாபாத்திரங்கள் கத்திக் கொண்டே இருப்பதாகவும் தொடர்ச்சியாக விமர்சனங்கள் குவிந்து வந்தது.
இந்நிலையில் கங்குவா திரைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், படக்குழுவை அதிர வைத்திருக்கிறார். அவர் பேட்டியில் இருந்து, படத்தோட டைரக்டர் சிவன் ராவா. யாருங்க அந்த டைரக்டர்? கையில கிடைச்சா கொல்லுவேன். படம் பாக்குற நாங்க என்ன முட்டாளா? ரத்தம் எல்லாம் கொதிக்குது.
இதையும் படிங்க:
தீபாவளிக்கு இரண்டு படம் பார்த்தோம். அதுதான் படம். நீங்க என்ன படம் எடுக்குறீங்க. தேவி ஸ்ரீ பிரசாத் மியூசிக். அவன் ஒரு பைத்தியக்காரன். சூர்யாவை அப்படியே போக சொல்லுங்க. காசு கொடுத்து படம் பார்க்கிறோம். நாங்க என்ன முட்டாளா? படத்தில் ஒரு விஷுவல் எபெக்டே இல்ல.
படம் தொடங்கினதிலிருந்து சூர்யா என்கிற பைத்தியக்காரன் கத்திகிட்டே இருக்காங்க. தமிழ்நாட்டில் இருக்கவங்களா மெண்டலா? காமெடி என்ற பெயரில் யோகி பாபு செய்றதெல்லாம் தாங்க முடியல. மொத பத்து நிமிஷம் அவன் சாவடிச்சான். படத்துல ஒரு மண்ணும் இல்லை.
விட்டா ஸ்கிரீனை கிழிச்சுகிட்டு போயிருக்கும். ரத்தம் கொதிக்குது. காசு என்ன சும்மாவா வருது. தீபாவளிக்கு அமரன் திரைப்படம் பட்டையை கிளப்பிட்டாங்க. இந்த படம் நல்ல 3d படமாக இருக்கும் என நம்பி உள்ளே போனேன். ஒரு மண்ணும் இல்லை. தலை வலி வந்தது தான் மிச்சம். இதெல்லாம் படமா? என கோபமாக பேசி இருக்கிறார்.