கங்குவா திரைப்படத்தால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நடுத்தெருவுக்கு வரப்போகிறார் என்று வலைப்பேச்சு அந்தணன் தனது பேட்டியில் பேசியிருக்கின்றார்.
நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் கங்குவா. ஒரு பீரியட் படமாக 700 வருடங்களுக்கு முன்பு நடக்கும் கதையை மையமாக வைத்து இயக்குனர் சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார்.
மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், நட்டி நடராஜ், யோகி பாபு, போஸ் வெங்கட் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
இதையும் படிங்க:
கடந்த ஒரு மாதமாக இந்த திரைப்படம் குறித்து படக்குழுவினர் மிக பிரம்மாண்டமாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை செய்து வந்தார்கள். ஒவ்வொரு ப்ரோமோஷன் மேடைகளிலும் படம் குறித்து மிகப்பெரிய லெவலில் பேசி படத்திற்கு ஓவர் ஹைப் கொடுத்திருந்தார்கள். இதனால் ரசிகர்களுக்கு இப்படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
படம் வெளியான முதல் நாள் முதலே தொடர்ந்து ரசிகர்களிடையே நெகட்டிவ் விமர்சனங்களை அதிக அளவில் பெற்று வருகின்றது. படத்தின் கதை அந்த அளவுக்கு ஸ்ட்ராங்காக இல்லை என்பது பலரது எண்ணமாக இருக்கின்றது. அண்ணாத்த திரைப்படத்தில் எப்படி சிறுத்தை சிவா கோட்டை விட்டாரோ அதேபோல் தான் தற்போது கங்குவா படத்திலும் கோட்டை விட்டுவிட்டார் என்று கூறி வருகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் சூர்யா கடந்த இரண்டு வருடங்களாக போட்ட உழைப்புக்கு பலன் இல்லாமல் போய்விட்டது என்பது பலரின் கருத்தாக இருந்து வருகின்றது. அது மட்டும் இல்லாமல் ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்திற்கு 300 கோடி வரை செலவு செய்திருக்கின்றார். சூர்யாவின் கெரியரிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த திரைப்படம் 2000 கோடி வசூல் செய்யும் என்கின்ற மிகப்பெரிய நம்பிக்கையில் இருந்திருந்தார்.
ஆனால் படம் தற்போது 200 கோடியை வசூல் செய்தாலே அது பெரிய விஷயம் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகிறார்கள். இந்நிலையில் கங்குவா படம் தொடர்பாக பிரபல விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் தனது பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார். இந்த படம் குறித்து அவர் தெரிவித்திருந்ததாவது: ‘பர்சனலாக இப்படத்தின் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன்.
இதையும் படிங்க:
படத்தின் சில காட்சிகளை பார்த்துவிட்டு ஓவராக நம்பி விட்டேனோ? என்பது படம் பார்த்த பிறகு தான் எனக்கு புரிய வந்தது. படம் தொடங்கியது முதல் முடிவது வரை எதற்கு கத்துகிறார்கள் என்று தெரியவில்லை. மேலும் அவர்கள் பேசுவதும் அந்த சத்தத்தில் சரியாக புரியவில்லை. அதுவும் 3d மூலமாக பார்க்கும் போது அனைவரும் கார்ட்டூன் போல் தெரிகிறார்கள்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரே திரைப்படத்தில் நடுத்தெருவில் வரப் போகின்றார். 2000 கோடி கனவெல்லாம் ஸ்வாஹா தான்.. அதிலும் சூர்யா தனது சொந்த காசிலே சூனியம் வைத்துக் கொண்டார்’ என்று பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருக்கின்றார்.