“என் மகன் மீது தாக்குதல்”.. அவங்க 4 பேர் மீதும் நடவடிக்கை எடுங்க… விக்னேஷின் தாயார் பரபரப்பு புகார்..!!!
SeithiSolai Tamil November 15, 2024 08:48 PM

சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவர் மனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவராக பாலாஜி என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இவர் அங்குள்ள பிற நோயாளிகளின் பிரிவிலுள்ள ஒரு அறையில் இருந்து ஒவ்வொரு நோயாளியாக அழைத்து மருத்துவ ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த வாலிபர் ஒருவர் டாக்டர் பாலாஜியிடம் கடுமையாக பேசியதோடு புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் தன்னுடைய தாயாருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிறையில் வாக்குவாதம் முற்றியதால் வாலிபர் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மருத்துவர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் மருத்துவரை கத்தியால் தாக்கிய விக்னேஷ் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் விக்னேஷிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மகன் விக்னேஷை தாக்கிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தாயார் பிரேமா சார்பில் அவரின் மற்றொரு மகன் லோகேஷ் கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் தனக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவர் மீது எனது மகன் தாக்குதல் நடத்தியுள்ளார். எனினும் எனது மகனை அங்கிருந்த 4 பேர் ஆபாசமாக திட்டியதோடு காலால் எட்டி உதைத்து தாக்கியுள்ளனர். அவன் இதய நோயாளி என தெரிந்தும் அவனது மார்பில் எட்டி உதைத்துள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த மனுவை கிண்டி காவல்துறையினரால் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.