பார்வையாளர்கள் தலைவலியுடன் வெளியேறினால் எந்த படத்துக்கும் ரிப்பீட் வேல்யூ இருக்காது என்று ரசூல் பூக்குட்டி தெரிவித்து இருக்கின்றார்.
சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் பீரியட் படமாக உருவாகியிருந்தது. முன் ஜென்ம கதையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்கள். மேலும் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.
இதையும் படிங்க:
மிகப்பெரிய பொருட்ச அளவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான நாள் முதலே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது. சூர்யா நடிப்பில் வெளிவந்த அஞ்சான் திரைப்படத்தை காட்டிலும் கங்குவா படத்திற்கு அதிக அளவு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் அதிக ட்ரோல்களை சந்தித்த இந்தியன் 2 திரைப்படத்தையே கங்குவா திரைப்படம் மிஞ்சுவிடும் என்பது பலரின் கருத்து.
இரண்டு வருடங்களாக கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா செதுக்குகிறேன் என்கின்ற பெயரில் மொத்தமாக சூர்யாவின் கெரியரையே முடித்துவிட்டார். இந்த திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பு மிகவும் பிரமாதமாக இருந்தது. அதை தவிர வேறு எதுவும் இல்லை என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.
அதிலும் தேசிய விருது வாங்கிய தேவி ஸ்ரீ பிரசாத்திடம் இசையமைக்கும் பணியை ஒப்படைத்ததற்கு படம் முழுக்க இரைச்சல் சத்தத்தை பயன்படுத்தி ரசிகர்களின் காதை செவிடாக்கி விட்டார். படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் அனைவரும் நீங்கள் படம் பார்க்க வந்தால் கட்டாயம் மாத்திரையுடன் வந்து படத்தை பார்த்து செல்லுங்கள் என்று கூறும் அளவிற்கு படத்தில் தேவி ஸ்ரீ பிரசாந்தின் இசை இடம் பிடித்திருக்கின்றது.
அதுமட்டுமில்லாமல் படத்தில் பீரியட் போர்ஷனில் அதிகளவு சத்தம் இருக்கும் காரணத்தால் நடிகர்கள் பேசும் எந்த வார்த்தையும் மக்களுக்கு சரியாக புரியவில்லை என்ற கருத்தும் இருந்து வருகின்றது. இந்நிலையில் ஆஸ்கார் விருது வென்ற இந்திய சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி கங்குமா படம் குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கின்றார்.
இதையும் படிங்க:
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘இதுபோன்ற பிரபலமான படங்களில் ஒலி பற்றிய விமர்சனத்தை பார்க்கும் போது மனம் வருத்தமாக இருக்கின்றது. இது யாருடைய குற்றம்? ஒலிப்பொறியாளரின் குற்றமா? கடைசி கூடுதல் விஷயங்களை சேர்க்க சொல்பவர்களின் குற்றமா? ஒலி கலைஞர்களே நாம் இப்போது இதைப்பற்றி கேள்வி எழுப்ப வேண்டும். பார்வையாளர்கள் தலைவலியுடன் வெளியேறினால் எந்த படத்துக்கும் ரிப்பீட் வேல்யூ இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என்று அவர் கூறியிருக்கின்றார்.