பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் 8வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, ஜப்பான், தென் கொரியா சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மலேசியாவையும், இரண்டாவது ஆட்டத்தில் தென் கொரியாவையும் வீழ்த்தியது. இதையடுத்து இந்தியா தனது 3வது ஆட்டத்தில் தாய்லாந்துடன் மோதியது. தொடக்கம் முதலே கோல் மழை பொழிந்த இந்தியா 13-10 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இந்தியா சார்பில் தீபிகா 5 கோல்களும், ப்ரீத்து துபே, மனிஷா சவுகான், லால்ரெம்ஸ்யாமி ஆகியோர் தலா 2 கோல்களும், பியூட்டி டங்டங் & நவ்நீத் கவுர் தலா 1 கோல்களும் அடித்தனர்.