தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு விதார்த் நடிப்பில் ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் வெளிவந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் அப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் பிரேம்ஜியை வைத்து சத்திய சோதனை என்ற படத்தை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு வந்த சுரேஷ் சங்கையா தற்போது காலமானார். அவருக்கு 41 வயது தான் ஆகிறது. மேலும் அவருடைய மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.