ரயில்வே நிர்வாகம் ரயில் மற்றும் ரயில்வே நிலையங்கள் அருகே ரில்ஸ் வீடியோ எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தற்போது உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் அந்த நபர்கள் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யுமாறு மண்டல ரயில்வே களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்துவிட்டது. அவர்கள் லைக்களை வாங்குவதற்காக விபரீதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் சில சமயங்களில் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. சமீபத்தில் ஓடும் ரயிலில் தொங்கி கொண்டே வாலிபர் ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் நிலையில் அவர் இரு கைகளையும் இழந்து வீட்டில் முடங்கிய நிலையில் அது தொடர்பான வீடியோவை ரயில்வே காவல்துறையினர் வெளியிட்டனர்.
தண்டவாளத்தில் இருந்து ரீல்ஸ் எடுப்பது போன்ற சம்பவங்களால் சில சமயங்களில் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. மேலும் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ரயிலில் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார்கள். மேலும் விபரீதமான செயல்களிலும் ஈடுபடுவதால் தற்போது இதனை தடுக்கும் விதமாக ரயில்வே நிர்வாகம் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.