நயன்தாரா மற்றும் தனுஷ் இடையிலான சர்ச்சை தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சை தொடங்கியதற்கு முக்கிய காரணம் நயன்தாரா பற்றி நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்துள்ள ஆவணப்படம். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தை நடிகர் தனுஷின் வண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்தது. நயன்தாராவின் ஆவணப்படத்திற்காக நானும் ரவுடிதான் படத்தின் பி.டி.எஸ் காட்சிகளை பயன்படுத்த அனுமதி கேட்டு கடந்த 2 ஆண்டுகளாக தனுஷ் மறுத்துவிட்டதாகவும் 3 நொடி காட்சி ஒன்றை பயண்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். தனுஷ் மீதான இந்த குற்றச்சாட்டுக்களுடம் தனிப்பட்ட ரீதியாகவும் பல குற்றச்சாட்டுக்களை நயன்தாரா முன்வைத்துள்ளார்.
நயன் தாராவுக்கு ஆதரவாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இன்னொரு பக்கம் குரல் எழுப்பி வருகிறார்கள். இன்னொரு பக்கம் தனுஷ் ரசிகர்கள் நயன்தாரா திட்டமிட்டே தனுஷ் மீது இந்த குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளதாக கூறி வருகிறார்கள்.
அதாவது நயன்தாராவின் ஆவணப்படத்தில் நயன் மற்றும் விக்னேஷ் இடையிலான காதல் கதைகளை பற்றி பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். நானும் ரவுடிதான் படத்தின்போது தான் இருவருக்கும் இடையில் காதல் வந்ததால் இந்த ஆவணப்படத்திற்கு அப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் முக்கியமானவையாக இருந்திருக்கின்றன. ஆனால் அந்த காட்சிகளை பயன்படுத்த தனுஷ் அனுமதி வழங்காததால் நயன்தாரா தனுஷ் மீது இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக தனுஷ் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த பிரச்சனையில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பது ஒரு விவாதமாக இருந்தாலும் இதனால் பயனடையப்போவது என்னவோ நெட்ஃப்ளிக்ஸ் தான். இந்த சர்ச்சைக்குப் பின் இந்த ஆவணப்படத்திற்கு இன்னும் அதிகப்படியான ரசிகர்கள் இந்த ஆவணப்படத்தைப் பார்ப்பார்கள். இதனால் லாபம் என்னவோ நெட்ஃப்ளிக்ஸ்க்கு தான் என பொதுவான ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள் . இந்த ஆவணப்படம் வரும் நவம்பர் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது
Vettri, tholvi, kaadhal, kalyanam-nu evlovo paatha namma Nayanthara-oda kadhai, ipo namma paakalama? ❤️👀
— Netflix India South (@Netflix_INSouth) November 9, 2024
Watch Nayanthara: Beyond the Fairytale on 18 November, only on Netflix! pic.twitter.com/5bxIGI05Tu