இந்த நாடு எங்களுக்கு தான் சொந்தம்… நீங்க நாட்டை விட்டு போங்க… கனடியர்களை கனடைவை விட்டு வெளியேற சொன்ன காலிஸ்தான்..!!
SeithiSolai Tamil November 16, 2024 10:48 PM

கனடாவில் வாழும் மக்களை திரும்பிச் செல்ல வேண்டும் என்று காலிஸ்தானியர்கள் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காலிஸ்தானியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒருவர், இது கனடா, எங்களின் சொந்த நாடு நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். வெள்ளையர்கள் ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும், எங்களுக்கு தான் இந்த நாட்டில் உரிமை உள்ளது என்று கூறினார். இவர் பேசும்போதே அங்கிருந்த சிலர் கத்தினர்.

இந்தக் கோரிக்கை காலிஸ்தானி இயக்கத்தின் மையமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேவில் நடந்த நிகழ்வில் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கனடா பிரதமர் ஐன்டின் ட்ரூடோ காலிஸ்தானி எனக்கு ஆதரவு தெரிவித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் கூறினார். இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா மற்றும் கனடா உயிர் அதிகாரிகள் மாறி மாறி குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு மோசம் அடைந்தது.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.