கடந்த ஆண்டு மார்ச்சில் உளுந்தூர்பேட்டையை அடுத்த ஆசனூர் சிட்கோ வளாகத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ரூ.2,300 கோடி முதலீட்டில் விளையாட்டு வீரர்களுக்கான ஷூ தயாரிக்கும் ஆலையை நிறுவ முன் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்போது அரசுத்தரப்பில், "தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத, தோல் பயன்படுத்தாத காலணி தயாரிக்கும் நிறுவனத்திற்கான இடத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்வு செய்துள்ளது. சர்வதேச அளவில் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம், முதலீட்டில் தொடங்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலையில், காலணி தயாரிப்பு உப பொருட்களை ஒருங்கிணைக்கும் பணி மட்டுமே நடைபெறும்.
அண்ணாமலை பதிவுஇதன் மூலம் மாவட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குறிப்பிடத்தக்க கூடிய அம்சம் என்னவெனில், 78 சதவீதம் வரையில் பெண்களே இதில் பணியமர்த்தப்படுவர். இந்தத் தொழிற்சாலைக்கான குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்க நீர் பயன்படுத்தப்படவுள்ளது. அந்த நிறுவனம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தேர்வு செய்வதற்கான முக்கிய காரணம் சாலை வசதியே. தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் வளாகம் உள்ளதால், தங்களது பொருட்களை எளிதாக ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வது எளிது என்பதாலேயே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் பொருளாதார ரீதியாக மேம்படைய வாய்ப்புண்டு" என்றனர்.
இந்த சூழலில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, "ஆட்சிக்கு வந்ததில் இருந்து வெற்று அறிவிப்புகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றுவதையே முழு நேரப் பணியாகச் திமுக அரசு செய்து வருகிறது. அதன் வரிசையில் இன்று, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், ரூ.1,000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியிருப்பதாக, முதலமைச்சர் பெருமைப்பட்டிருக்கிறார். கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், தைவான் நாட்டைச் சேர்ந்த காலணி நிறுவனம், ரூ. 2,302 கோடி முதலீடு செய்வதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அறிவித்த திமுக அரசு, அதன் மூலம், 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அறிவித்தது.
திமுக பவள விழா - ஸ்டாலின்சுமார் 20 மாதங்கள் கடந்தும், அந்தத் தொழிற்சாலை கட்டுமானத்துக்காக, ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளது. வெறும் ரூ.60 கோடி முதலீடு கூட இன்னும் தமிழகத்தை அடையவில்லை. இது போன்ற வீண் நாடகங்களை இனியாவது நிறுத்தி விட்டு, தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்இதுகுறித்து திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், "கடந்த ஆண்டு ஏப்ரலில்தான் சிப்காட்டில் ரூ.2,300 கோடியில் காலணி தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் 12 ஆண்டுகளில்தான் ரூ.2,200 கோடியில் 20,000 பேருக்கு வேலை என கூறப்பட்டிருக்கிறது. எனவே அவர்கள் படிப்படியாகவே அதற்கான பணிகளை தொடங்குவார்கள். ஓராண்டுதான் தற்போது ஆகிறது. அண்ணாமலைக்கு அவசரம் அதிகமாக இருந்தால் தனது சொந்த பணத்தை கொடுக்கலாம்" என்கிறார் காட்டமா.!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...