குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு 10:40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
200க்கும் அதிகமான குடியிருப்பு வாசிகள் மீட்கப்பட்ட நிலையில் 22 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மிலாபென் ஷா என்ற பெண்ணும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இரவு தொடங்கி அதிகாலை 03:40 மணி வரை தீயணைப்பு வீரர்கள் கடுமையான போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.