பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி பேசுகையில், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு, சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம், இன்று வந்து தமிழர்கள் என்று கூறும் போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள்" என்று கேள்வி எழுப்பி பேசி இருந்தார்.
கஸ்தூரியின் இந்த பேச்சிற்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அவர் மீது காவல்நிலையங்களில் 6 வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புகாரின் பேரில் அவருக்கு போலீசார் சம்மன் வழங்க சென்றபோது அவர் தலைமறைவான நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடிகை கஸ்தூரி முன் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், அவர் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், சற்றுமுன் ஹைதரபாத்தில் வைத்து நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.