கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தில் சிந்தனூரில் வசித்து வந்தவர் பசவராஜ். இவர் பெங்களூருவில் உள்ளல் லக்கரேயில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் சம்பவநாளன்று இரவு இரண்டு மணி வரை வேலை பார்த்த அசதியால் பீனியா அருகில் உள்ள பார்லேஜி டோல்கேட்டில் அதிக மழையின் காரணமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் அடியில் சென்று படுத்துள்ளார். அந்த லாரியின் ஓட்டுனர் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் மழையின் காரணமாக பசவராஜ் லாரி அடியில் சென்று உறங்கிவிட்டார். இதனை அறியாத லாரி ஓட்டுநர் லாரியை இயக்கியுள்ளார். இதனால் பசவராஜ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறிந்த பீனியா பகுதி போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திர்ற்கு சென்று பசவ ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.