சென்னை ஜெமினி ரோட்டரி சங்கம் சார்பில் தேசிய அளவிலான பேட்மிட்டன் போட்டி நடைபெற்ற நிலையில் அதனை பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசினார். அவர் பேசியதாவது, தமிழக பேட்மிட்டன் சங்க தலைவராக நான் 7 வருடங்களாக இருக்கும் நிலையில் நான் வந்த பிறகு திறமையின் அடிப்படையில் ஒவ்வொரு வீரருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதற்கு முன்னதாக சிபாரிசு அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன பலவற்றை நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் கடந்த 57 வருடங்களாக திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில் சென்னையின் நிலை மட்டும் தற்போது வரை மாறவில்லை.
திமுக மொத்தம் 590 தேர்தல் வாக்குறுதிகளை அதில் 490 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மேலும் தமிழ்நாட்டில் கண்டிப்பாக 2026 இல் கூட்டணி ஆட்சி தான் அமையும். அந்த கூட்டணி ஆட்சியில் கண்டிப்பாக பாமக கட்சி இடம்பெறும் என்றார். மேலும் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய நடிகர் விஜய் கூட்டணி அக்கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று கூறிய நிலையில் தற்போது தமிழ்நாட்டில் 2026 இல் கூட்டணி ஆட்சி தான் நிலவும் என்றும் அதில் பாமக இடம்பெறும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியதால் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.