குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ் குபாவத். இவர் மரைன் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் துறைமுகத்தில் படகு உரிமையாளர்களுக்கு எரிபொருளை விற்கும் நபரை தன்னை வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார்.
அப்படி தன்னை சந்திக்க வந்த நபரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அந்த நபர் அடுத்த சந்திப்பில் தான் வைத்திருக்கும் Iphone 16 Pro போனை கொடுப்பதாக கூறியுள்ளார். அந்த நபர் சொன்னது போன்றே ஐபோனை கொடுப்பதற்காக வந்துள்ளார்.
இதனிடையே அவர் லஞ்ச ஒழிப்பு துறைக்கும் தகவல் கொடுத்துள்ளார். இதை அடுத்து ஐபோனை தினேஷிடம் கொடுக்கும் சமயத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தினேஷை கைது செய்தனர்.