தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் கஸ்தூரி. இவர் சமீபத்தில் தெலுங்கர்கள் குறித்து மிகவும் அவதூறான வகையில் பேசினார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் காவல்துறையினர் அவருக்கு சம்மன் அனுப்ப சென்றபோது தலைமறை வாகிவிட்டார்.
அவர் சென்னை உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் அவரை காவல்துறையினர் தற்போது ஹைதராபாத்தில் வைத்து கைது செய்துள்ளனர். மேலும் அவரை சென்னைக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.