பிரபல நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் நயன்தாராவின் திருமண ஆவணப்படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திருமண வீடியோ ரிலீசாகும் என்ன நெட்பிளிக்ஸ் அறிவித்தது. டிரெயிலர் வீடியோவில் பயன்படுத்தப்பட்ட மூன்று வினாடி பாடலுக்காக 10 கோடி ரூபாய் கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷ் பற்றி பேசி நயன்தாரா தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த காலத்தில் உங்களுடன் பயணித்தவர்கள் வெற்றி பெற்றால் இந்த கோபமும் இல்லாமல் அமைதியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்த கடிதத்தின் மூலம் வேண்டுகிறேன். உலகம் எல்லோருக்கும் சமமாக இருக்கிறது. கடின உழைப்பின் கடவுளின் அருள் மக்களின் பேரன்பு காரணமாக வெற்றி பெரும் ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் அது உங்களை பாதிக்க கூடாது. அடுத்த இசை வெளியீட்டு விழாவில் இது போன்ற விவகாரங்கள் நிகழவில்லை என பிரார்த்திக்கிறேன் என பேசியுள்ளார்.
ஏற்கனவே கொட்டுக்காளிபடத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவின் போது சிவகார்த்திகேயன் யாரையும் கண்டுபிடித்து நான் அவரை வளர்த்து விட்டேன். வாழ்க்கை கொடுத்தேன் என்ன சொல்ல மாட்டேன். என்னை அப்படி சொல்லியே பழகி விட்டார்கள். அந்த மாதிரி ஆள் நான் கிடையாது என கூறியிருந்தார். அவர் தனுஷை தான் மறைமுகமாக விமர்சித்துள்ளார் என நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் விவாதித்து வந்தனர். தற்போது நயன்தாராவும் கடந்த காலத்தில் உங்களுடன் பயணித்தவர்கள் வெற்றி பெற்றால் எந்த கோபமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறியிருப்பது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.