மழை நீரில் மூழ்கிய சாலைகள்... போக்குவரத்து துண்டிப்பு!
Dinamaalai December 03, 2024 09:48 PM

 


வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனையடுத்து நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 சென்னையில்  தமிழகம், புதுவையில் கோரத் தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல் காரணமாக, பல்வேறு பகுதிகளின் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.   அதன்படி விழுப்புரம் மாவட்டம் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று அரசூர் பகுதியில் சென்னை – திருச்சி நெடுஞ்சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது. நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

 அந்தப் பகுதியில் இன்று காலை போக்குவரத்து சீரான நிலையில்  விழுப்புரம், கடலூர், தி.மலை வட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.கோவை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழ வெள்ளத்தால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து மீட்பு வாகனம் மூலம் இழுத்து செல்லப்பட்டது. அதே போல் மணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால்  சேலம்-பெங்களூரு சாலையில் போக்குவரத்து நிறுத்த்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில்  ஓடும் மழை வெள்ளத்தில் கார்கள் முழுவதுமாக மூழ்கியது. மேலும், கந்தம்பட்டி பைபாஸ் பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. 
புதுச்சேரி – கடலூர் இடையிலான போக்குவரத்து 2வது நாளாக முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் முள்ளோடை பகுதியில் மழை நீர் குளம் போல்  தேங்கியுள்ளது.


விழுப்புரத்தில் பெய்த கனமழையால் கும்பகோணம் – தஞ்சாவூர் சாலையும் துண்டிக்கப்பட்டுள்ளது. கப்பியாம்புலியூர் ஏரியில் ஏற்பட்ட உடைப்பால் 100 ஏக்கருக்கு மேலான நெல், உளுந்து   பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.  தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூர் – புதுச்சேரி சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. அந்த சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சேதமடைந்து இருப்பதால் அப்பகுதியில்  போக்குவரத்து தாற்காலியமாக நிறுத்தப்பட்டுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.