இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளம் இன்று காலை திடீரென முடங்கியதால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவித்த நிலையில், பலரும் இது குறித்து சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர். எனினும் IRCTC இணையதள செயலிழப்புக்கு இதுவரை பதிலளிக்கவில்லை.
IRCTC இணையதளத்தை இன்று காலை டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக பயன்படுத்திய பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். 'பராமரிப்பு நடவடிக்கை காரணமாக செயலைச் செய்ய முடியவில்லை' என்ற தகவல் ஒளிரச்செய்யப்பட்ட நிலையில் டிக்கெட் முன்பதிவு, தக்கல் டிக்கெட் முன்பதிவு போன்ற எந்த செயலையும் செய்ய முடியாமல் பயணிகள் தவித்தனர்.
2022-24 க்கு இடையில் இந்தியாவின் EV துறை தனது நிதியில் பாதியை இழந்தது ஏன் என்று ஒரு பயனர் ட்வீட் செய்துள்ளார். "@RailMinIndia @AshwiniVaishnaw @PMOIndia இந்த மோசடி எப்போது நிறுத்தப்படும்? எப்போதும் காலை 10 மணிக்கு ஐஆர்சிடிசி இணையதளம் செயலிழந்த நிலையில், தற்போது மீண்டும் இயங்க தொடங்கியதும் இரட்டை விலை கொண்ட பிரீமியம் டிக்கெட்டுகள் மட்டுமே கிடைக்கிறது. இது @IRCTCofficial @raghav_chadha மூலம் தெளிவான மோசடி என்று புகார் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.
"காலை 10:11 ஆகிறது. இன்னும் ஐஆர்சிடிசி இணையதளம் திறக்கவில்லை. ஐஆர்சிடிசியை விசாரித்து சரிபார்க்க வேண்டும். கண்டிப்பாக மோசடிகள் நடக்கின்றன. திறக்கும் நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்துவிட்டன" என்று மற்றொரு பயனர் கூறியுள்ளார்.
"இந்தியா சந்திரனை அடைந்தது. ஆனால் இந்திய ரயில்வேயின் டிக்கெட் முன்பதிவு செயலி தட்கல் முன்பதிவை செயலிழக்காமல் கையாள முடியாது” என்று கமெண்ட் செய்துள்ளனர்.
இந்த மாதத்தில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய IRCTC இணையதள செயலிழப்பு இது. முன்னதாக கடந்த டிசம்பர் 9ம் தேதி இ-டிக்கெட்டிங் பிளாட்பார்ம் ஒரு மணி நேர பராமரிப்புக்கு செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.