ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி ராகிங் கொடுமை
Top Tamil News December 03, 2024 09:48 PM

திருவல்லிக்கேணி ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியின் அருகே மாணவ, மாணவிகள் தங்குவதற்கு விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் 50 மாணவிகளும், 25 மாணவர்களும் தங்கியுள்ளனர். 

இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர், மூன்றாம் ஆண்டு  மாணவர் ஒருவர் தன்னையும் தன்னை போல் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களையும் Home Work எழுத சொல்வதாகவும், ராகிங் செய்வதாகவும் டெல்லியில் உள்ள Anti Ragging Helpline University Grants Commission Net Burean -1800-180-5522 என்ற முகவரிக்கு ஆன்லைன் மூலம் புகார் கொடுத்துள்ளார். 

கடந்த 27.11.2024 ம் தேதி Anti Ragging Helpline University Grants Commission Net Bureau-ல் இருந்து மருத்துவ கல்லூரிக்கும், திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கும் ஆன்லைன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவ கல்லூரி தரப்பில் மருத்துவ கல்லூரி முதல்வர்  அரவிந்த் அவர்கள் தலைமையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் அறிக்கையை Anti Ragging Helpline University Grants Commission Net Bureau விற்கு அனுப்புவதற்கு  மருத்துவக் கல்லூரி முதல்வர்  கமிஷனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர்கள் உங்கள் விசாரணை குழுவில் காவல்துறை உதவி ஆணையாளர் தலைமையிலான ஒருவர் அக்குழுவில் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தியதால்  ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி RMO சரவணன், ராகிங் சம்பவம் பற்றி 02.12.24 ம் தேதி திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.

திருவல்லிக்கேணி சரக உதவி ஆணையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் அடங்கிய  குழுவுடன் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையரும் இணைந்து இன்று விசாரணை நடத்துகிறார்கள். ராகிங் குற்றச்சாட்டு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.