Kanguva: கங்குவா படம் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர்கள் சொன்ன நெகட்டிவ் விமர்சனம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வைரலாகி அந்த படத்தின் வசூலுக்கே வேட்டு வைத்தது. எனவே, இனிமேல், தியேட்டருக்குள் யுடியூப் சேனல்கள் ரசிகர்களிடம் கருத்து கேட்கக்கூடாது என சமீபத்தில் தியேட்டர் அதிபர் சங்கம் தடை விதித்தது.
அதேபோல், படம் வெளியாகி 3 நாட்களுக்கு யுடியூப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என சொல்லி சினிமா துறை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால், கருத்து சுதந்திரத்திற்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் சொல்லிவிட்டது.
kanguva
இந்நிலையில், பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன் டிவிட்டரில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் ‘இப்போதாவது கங்குவா படம் தோத்து போனதுக்கு கதை நல்ல இல்லை என்கிற உண்மையை ஒத்துப்பீங்களா இல்லை விமர்சனங்களை தடுக்க புது ஐடியாவை மறுபடியும் யோசிச்சி பல்பு வாங்க போறீங்களா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ‘ஹீரோக்களின் வானளாவிய சம்பளம், சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்காதது, கதை திருட்டு, இசை திருட்டு. உதவி இயக்குனர்களுக்கு நியாயமான சம்பளம் இல்லாதது, புரமோஷனுக்கு வராத நடிகர்கள், பிரிந்து கிடக்கும் தயாரிப்பாளர் சங்கங்கள், படப்பிடிக்கும் வராமல், வாங்கிய அட்வான்ஸையும் திருப்பி தராமல் ஏமாற்றும் நடிகர்கள்,
பல உதவியாளர்களை அழைத்து வந்து அந்த செலவையும் தயாரிப்பாளர் தலையில் கட்டும் நடிகைகள், ஆன்லைன் பைரசி. ஓடிடி, சாட்டிலைட் வியாபாரம் ஆகாமல் இருக்கும் நூற்றுக்கணக்கான படங்கள், பலமடங்கு இருக்கும் தியேட்டர் தின்பண்ட விலை மற்றும் பார்க்கிங் விலைகள் என இப்படி தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் நிறைய இருக்கிறது.
இதை நாம் சொல்லவில்லை. திரைத்துறையை சேர்ந்தவர்களே பல சினிமா மேடை மற்றும் பேட்டிகளில் சொல்கிறர்கள். ஆனால், இதில் ஒருவிஷயத்திற்கு கூட தீர்வு கண்டதில்லை. இவற்றை சரி செய்தாலே போதும். தமிழ் சினிமா உருப்படும். இனியாவது இதில் உங்கள் நேரத்தையும், அறிவையும் செலவிடுங்கள். அதைவிட்டுவிட்டு விமர்சகர்கள் பக்கம் பாய்ந்து.. தடை விதித்தாலும் உங்கள் மொக்கை படங்கள் ஓட வாய்ப்பே இல்லை’ என காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: