சேற்றை வீசிய மக்களை பழிவாங்க கூடாது… அராஜகத்தை வேடிக்கை பார்க்க மாட்டோம்… முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்…!!
SeithiSolai Tamil December 03, 2024 09:48 PM

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக விழுப்புரத்திற்கு சென்றுள்ளார். அவர் இருவேல்பட்டு பகுதிக்கு சென்றபோது காரில் இருந்தபடியே அவர் பார்வையிட்டதாக தெரிகிறது.

ஏற்கனவே அந்த பகுதி மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அமைச்சரை பார்த்ததும் கோபமடைந்த கிராம மக்கள் அவர் மீது சேற்றை வாரி இறைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது, காரை விட்டு இறங்காமல் பேசியதால் சேற்றை வாரி இறைத்துள்ளதாகவும், இதற்காக துன்புறுத்தலோ அதிகார துஷ்பிரயோகமோ நிகழக்கூடாது. அப்படி ஒரு அராஜகத்தை திமுக அரசு முன்னெடுத்தால் அதிமுக வேடிக்கை பார்க்காது என கூறியுள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.