வங்கதேசத்தில் இந்திய டி.வி., சேனல்களுக்கு தடையா? ஐகோர்ட்டில் மனுதாக்கல்..!
WEBDUNIA TAMIL December 04, 2024 01:48 AM

வங்கதேசத்தில் இந்திய டிவி சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வங்கதேச ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு சமீப காலமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இஸ்கான் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், வங்கதேசத்தில் ஒளிபரப்பாகும் இந்திய டிவி சேனல்களில் இது குறித்த செய்திகள் பரபரப்பாக இயங்குகின்றன.

ஸ்டார் பிளஸ், ஸ்டார் ஜால்சா, ஜீ பங்களா, ரிபப்ளிக் பங்களா உள்ளிட்ட பல்வேறு சேனல்கள் இதை தொடர்புடைய செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதன் பேரில், இந்த சேனல்களை தடை செய்ய வேண்டும் என வங்கதேச ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சேனல்கள் வன்முறையை தூண்டும் வகையில் செய்திகளை பரப்புவதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், வங்கதேசத்தில் இந்திய டிவி சேனல்களுக்கு தடை விதிக்கப்படுமா என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும் என கூறப்படுகிறது.

Edited by Siva

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.