கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ.பாஷா கடந்த 16-ந் தேதி உயிரிழந்தார்.
தொடர்ந்த மறு நாள் அவரது இறுதி ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி அளித்தது, இதற்க்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று இதற்க்கு கண்டனம் தெரிவித்து பாஜக சார்பில் கோவை காந்திபுரத்தில் கருப்பு தின பேரணி நடந்தது.
இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போலீசார் அனுமதி மறுத்தபோதும், பாஜக சார்ந்தோர் பேரணியில் ஈடுபட்டதால், அண்ணாமலை, வானதி உள்பட 917 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
மேலும், பாஜக மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் மீது தடையை மீறியதாக கோவை காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல், எஸ்.ஏ.பாஷாவின் இறுதி ஊர்வல அனுமதியை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.