செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யகோரிய மறுசீராய்வு மனு தள்ளுபடி..!
Seithipunal Tamil December 22, 2024 08:48 AM

தமிழகத்தின் அமைச்சரான செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதனால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜி சுமார் ஒருவருடத்திற்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி ஜாமின் வழங்கியது.

இதையடுத்து செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இதற்கிடையே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியதை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், அமலாக்கத்துறை அலுவலகத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் பிணை தொகையுடன் இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.