கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு இந்தியாவின் ஐடி தொழில் நகரமாக விளங்கி வருகின்றது. இங்கு கேரளா முதல் வட மாநிலங்கள் வரை பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். பெங்களூருவில் இருக்க வேண்டும் என்றால் யாராக இருந்தாலும் கன்னட மொழியில் தான் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கன்னடர்கள் இடையே இருந்து வருகின்றது.
அதில் முதல்வர் சித்தராமையா தொடங்கி ஆட்டோ டிரைவர் வரை அதையே வலியுறுத்தி வருகின்றனர். இந்த அழுத்தம் சில நேரங்களில் எல்லை மீறி செல்வதும் உண்டு. இந்நிலையில் கன்னடம் தெரியவில்லை என்றால் கவலையை விடுங்கள் டெல்லிக்கு வாருங்கள் என கார்ஸ் 24 நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் சோப்ரா இன்ஜினியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த பதிவில் பெங்களூருவில் பல ஆண்டுகளாக இருந்தும் இன்னும் கன்னடம் பேச முடியவில்லை டெல்லிக்கு வா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. டெல்லி என்.சி.ஆர் சிறந்தது என்று நாங்கள் கூறவில்லை.
ஆனால் அதுதான் உண்மை. நீங்கள் திரும்பி வர விரும்பினால் vikram@cars24. com என்ற தளத்தில் எனக்கு எழுதுங்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் வேலைக்கு ஆள் தேட விக்ரம் சோப்ரா இந்த உத்தியை பயன்படுத்தியுள்ளார் என்றும், ஒருவகையில் பெங்களூரு வாசிகளை கன்னடர்களை தவறாக சித்தரிக்கும் பதிவாகவும் இது உள்ளதாக இணையவாசிகள் கன்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு கார்ஸ் 24 என்பது பயன்படுத்திய கார்களை வாங்கி விற்கும் நிறுவனமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.