வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. பிரபல நடிகரான விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதனால் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இந்த நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெறுவோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். அதற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எல்லோருக்குமான அம்பேத்கர் தலைவர் நிகழ்ச்சியில் விமர்சித்தார்.
இந்த நிலையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி 2026 சட்டமன்ற தேர்தலில் 200 இல்லை. 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம். 2026 இல் நாம் பெரும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமல்ல இந்தியாவுக்கான வெற்றி எனக் கூறியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் திமுகவை பலப்படுத்த வேண்டும். திமுகவுக்கு மகளிர் ஆதரவு அபரிவிதமாக இருக்கிறது. நம் கூட்டணி நாளுக்கு நாள் வலுவாகி கொண்டிருக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.