பிக் பாஸ் 8: என்ன வேணா பேசுவீங்களா.. காரசாரமான விவாதம்.. அன்ஸிதாவால் கடுப்பான விஜய் சேதுபதி..
Tamil Minutes December 23, 2024 12:48 AM

இந்த வாரம் நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்திருந்த போது அவர் கேட்ட பல்வேறு கேள்விகள் ஒவ்வொரு போட்டியாளர்களையும் வாயை திறக்க விடாமல் அப்படியே சைலண்டாக நிற்க வைத்திருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்பதால் ஃபைனல் வரைக்கும் முன்னேறுவதற்காக அனைத்து முயற்சியிலும் போட்டியாளர்கள் இறங்கி வருகின்றனர்.

இதற்கு மத்தியில் கடந்த வாரம் நடந்திருந்த கேப்டன்சி டாஸ்க் உள்ளிட்ட அனைத்திலுமே சர்ச்சைகள் அரங்கேறி இருந்தது. அதில் பல விஷயங்களை பற்றி பேசியிருந்த விஜய் சேதுபதி, விஜே விஷால், சௌந்தர்யா, முத்துக்குமரன் உள்ளிட்ட பல போட்டியாளர்களின் தவறுகள் பற்றியும் நேரடியாக பேசி சிலரின் முகத்திரையை கிழித்திருந்தார்.

கடந்த வாரம் கேப்டனாக இருந்த விஜே விஷால், நிறைய விஷயங்களில் ஒரு தலைப்பட்சமாக முடிவெடுத்ததாக விமர்சனங்கள் இருந்தது. இதனையும் தோலுரித்துக் காட்டிய விஜய் சேதுபதி ராணவ் காயத்தில் இருந்த போது அதை தவறாக சுட்டிக்காட்டியவர்களையும் கடுமையாக விமர்சித்திருந்தார். டாஸ்க் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்த ராணவின் இடது கையில் காயம் ஏற்பட அவர் தற்போது வேறு எந்த டாஸ்க்கிலும் ஈடுபட முடியாத நிலையில் இருந்து வருகிறார்.

ஆனால் அவருக்கு காயம் ஏற்படவில்லை என்றும் அது பிராங்க் தான் என்றும் கூறி நடித்துக் கொண்டிருப்பதாகவும் சவுந்தர்யா, அன்ஸிதா, முத்துக்குமரன், விஜே விஷால் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து குறிப்பிட்டே வந்தனர். அந்த வகையில் இது பற்றி பேசியிருந்த விஜய் சேதுபதி, ராணவ் நடிப்பதாக குறிப்பிட்ட அனைத்து போட்டியாளர்களிடமும் அப்படி சொன்னதற்கான விளக்கத்தையும் கேட்டிருந்தார்.

இதற்கு பதில் சொல்லும் அன்ஸிதா, “ஒரு கையில் விழுந்து விட்டு இன்னொரு கையில் வலி இருப்பது போல் ராணுவ் செய்ததால் நான் அவர் எப்போதும் போல பிளான் செய்கிறார் என நினைத்து விட்டேன். இதனால் தான் சும்மா நடிக்காதே என்றும் நான் கூறினேன்” என்று சொன்னதும் இடைமறித்த விஜய் சேதுபதி, ‘ப்ரோமோ வருவதற்காக இப்படி எல்லாம் செய்யாதே என்று தானே நீங்கள் கூறினீர்கள்’ என அன்ஸிதாவிடமும் கேட்கிறார்.

உடனடியாக அரங்கத்தில் இருந்தவர்கள் கைதட்டி ஆர்ப்பரிக்க, தொடர்ந்து பேசும் விஜய் சேதுபதி, ‘பேசலாம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா. ஒருத்தருக்கு அடிபட்டுருக்கு. வேறு ஏதாவது நடந்திருந்தால் பிரச்சனை இல்லை. நீங்கள் வேறு அன்பான நபர் என வீட்டிற்குள் பேசிக் கொள்கிறார்கள்.

சாப்பாட்டுக்காக கோவப்பட்ட அன்ஸிதா இப்போது எங்கே போனார். நமக்கு பிடிக்காத ஒருவராக கூட இருக்கட்டும். ஆனால் அவருக்கு அடிபட்டுருக்கிறதல்லவா. அதை நினைத்தாவது அப்படி பேசி இருக்கக்கூடாது’ என அறிவுரை கூறுகிறார். தொடர்ந்து கடைசியில் இந்த சம்பவத்திற்காக ராணவிடம் அன்ஸிதா மன்னிப்பு கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.