உத்தரப் பிரதேச, மாநிலம் காஸியாபாத் நகரில், கொசுவர்த்தியை பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு சிறுவர்கள் தீயில் கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஸியாபாத்: பிரஷாந்த் விஹார் பகுதியில் நீரஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்த வான்தார். நேற்று இரவு அவரது மகன்கள் வான்ஷ் (10-ஆம் வகுப்பு) மற்றும் அருண் (12-ஆம் வகுப்பு) தங்கள் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கொசுகடித்ததால், இருவரும் எழுந்து, கொசுவர்த்தியை கட்டிலுக்குக் கீழே பற்றவைத்து மீண்டும் உறங்கச் சென்றுள்ளனர்.
அடுத்த ஒரு மணி நேரத்தில், வீட்டில் புகை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த நீரஜ், குழந்தைகள் அறையைத் திறந்தபோது தீ பரவி கொண்டிருந்தது.
இதில் சிறுவன் வான்ஷ் சம்பவ இடத்திலேயே பலியாக, தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அருண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்துள்ள போலீசார், கொசுவர்த்தியைப் பற்ற வைத்ததுதான் தீ விபத்துக்கான காரணமா என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.