உத்தர் பிரதேஷ் மாநிலம் காசியபத் பகுதியை சேர்ந்தவர் நீரஜ். இவருக்கு அருண் மற்றும் வன்ஸ் இரண்டு மகன்கள் இருந்தனர். சம்பவத்தன்று இரவு 1 மணி அளவில் சிறுவர்கள் இருவரும் தங்கள் அறையில் கொசுபத்தியை கொளுத்தி வைத்துவிட்டு உறங்கியுள்ளனர். இரவு 2:30 மணி அளவில் நீரஜ் உறக்கத்திலிருந்து விழித்த போது மகன்கள் உறங்கிக் கொண்டிருந்த அறையில் இருந்து புகையும் நெருப்பும் வெளியில் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அறைக்கு விரைந்து பார்த்தபோது இருவரில் ஒருவரான வன்ஸ் ஏற்கனவே உயிரிழந்திருந்ததை பார்த்து கதறி துடித்தார். பின்னர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அருணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். கொசுபத்தி பிளாங்கெட் மற்றும் கட்டிலில் இருந்த துணியில் பட்டு தீ விபத்து ஏற்படுத்தியதாக முதற்கட்ட விசாரணைகள் தெரியவந்துள்ளது.