மத்திய உள்துறை மந்திரி அமைச்சர் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள் பெயரை சொன்னால் கூட அடுத்த ஏழு ஜென்மங்களுக்கு சொர்க்கத்திற்கு போகலாம் என்று கூறிய நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையாக மாறிய நிலையில் நாடு முழுவதும் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் எதிர்கட்சிகள் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருவதோடு அவர் பதவி விலக வேண்டும் எனவும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் பிரியங்க் கார்கே உள்துறை மந்திரி அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, உள்துறை மந்திரி அமித்ஷாவை வெறிநாய் கடித்துவிட்டது. எனவே தான் அவர் அம்பேத்கர் பற்றி விமர்சித்துள்ளார். கடவுள் பெயரை சொன்னாலே எப்படி சொர்க்கம் கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அம்பேத்கர் பெயரை கூறினால் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் சமத்துவம் கிடைக்கும் என்றார். மேலும் அமித்ஷாவை வெறிநாய் கடித்துவிட்டது என்று அவர் கூறியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.