ஆப்பிரிக்க நாடான காங்கோவில் புசிரா ஆறு உள்ளது. இந்த ஆற்றில் ஏராளமான மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊருக்கு படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ஆற்றில் படகு கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த படகில் 400க்கும் மேற்பட்டோர் சென்ற நிலையில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை. மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது அந்த பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவத்தால் அங்கு பெரும் அதிர்ச்சி நிலவியுள்ளது.