சென்னை மாவட்டம் கீழ்பாக்கம் பகுதியில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் 5 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில் ரம்யா தன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திவ்யா சம்பவ நாளில் தன்னுடைய இரு குழந்தைகளின் கழுத்தையும் அறுத்துள்ளார்.
பின்னர் கத்தியால் தன்னைத்தானே அவர் குத்தியுள்ளார். இதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த நிலையில் 5 வயது மகனும் திவ்யாவும் தற்போது மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த மன அழுத்தத்தில் திவ்யா இப்படி ஒரு கோர முடிவை எடுத்தது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.