மேல்மருவத்தூர் செல்லும் பேருந்தில் மின்சாரம் தாக்கியதில் இளம்பெண் அகல்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
பேருந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட போது, மின்கம்பத்தை உரசியதால் மின்சாரம் பேருந்தில் பாய்ந்தது.
பேருந்தில் இருந்து இறங்க முயன்ற அகல்யா, காலணி அணியாமல் இரும்பு கைப்பிடியை பிடித்தபோது மின்சாரம் தாக்கியது.
சம்பவம் குறித்து சக பக்தர் சந்தியா கொடுத்ததகவளின் படி, அகல்யாவை காப்பாற்ற முயன்ற இருவரையும் மின்சாரம் தாக்கியதும் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் குறித்து போலீசை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், டீ குடிக்க பேருந்தை நிறுத்தியதின்போது இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.