கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் தனியார் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து ஒன்பதாம் வகுப்பு மாணவி கீழே விழுந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த மாணவி தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்யும் நோக்கில் மாடியில் இருந்து குதித்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.