Biggboss Season 8: ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு கிழமைகள் வருகிறதோ இல்லையோ இந்த வாரம் யார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகிறார் என்ற ஒரு ஆர்வம் ரசிகர்கள் மனதில் எழுந்து விடும். அந்தளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததும் இதை பற்றிய ஒரு க்யூரியாசிட்டி ஆரம்பித்துவிடும். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது நடந்து வருகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடந்து வரும் வேளையில் இந்த வாரம் மட்டும் சிங்கிள் எவிக்ஷன் நடக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. அதுவும் யார் இந்த வாரம் வெளியேற போகிறார் என்பதை பற்றியும் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் குறைவான வாக்குகளின் அடிப்படையில் ரயான் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் லிஸ்ட்டில் இருப்பதாக தெரிகிறது.
இதில் ரயானுக்கு ப்ரீ பாஸ் இருந்தும் நேற்று முத்துக்குமரன் செய்த வேலையால் பிக்பாஸ் அந்த ப்ரீ பாஸை ரத்து செய்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் அன் அஃபிசியல் வாக்குகளின் அடிப்படையில் பவித்ராவும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார். ஆகையால் எவிக்ஷன் லிஸ்டில் ரயான், ரஞ்சித், பவித்ரா ஆகியோர் இருக்க ரஞ்சித் வெளியேற வாய்ப்பிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இந்த வாரம் விஜய்சேதுபதிக்கு சரியான வேட்டை கிடைத்திருப்பதாகவும் தெரிகிறது. அந்தளவுக்கு உள்ளே போட்டியாளர்கள் இந்த வாரம் கண்டெண்டுகளை வாரி வழங்கியிருக்கிறார்கள். ராணவ் கை உடைந்ததில் இருந்து நேற்று முத்துக்குமரன் பவித்ராவுக்காக விட்டுக்கொடுத்தது வரையிலும் விஜய்சேதுபதி யாரை என்ன கேட்கப் போகிறார்? அல்லது யாருக்காக பரிந்து பேசப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய்சேதுபதிக்கு சரியான வேட்டை என்றாலும் பார்க்கும் ரசிகர்களுக்கும் இது ஒரு வகையில் கண்டெண்ட் கிடைத்ததை போலத்தான் அமைந்திருக்கிறது. ஏனெனில் ரசிகர்கள் மனதில் நினைத்ததை விஜய் சேதுபதி இன்று செய்து விட்டால் விஜய்சேதுபதி தப்பித்தார். இல்லையென்றால் சிக்கினார் விஜய்சேதுபதி என்பது போல் மாறிவிடும். அதனால் இந்த வாரம் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Also Read: