'விதவை பணத்திற்கு ஆசைப்பட்டு பெண் செய்த கேடி செயல்'.. 12 முறை விவாகரத்து செய்து 12 முறை மறுமணம்!
Dinamaalai December 21, 2024 11:48 PM

ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவைச் சேர்ந்த ஒரு பெண், 1981 இல் தனது கணவர் இறந்த பிறகு, அந்த நாட்டு அரசாங்கத்திடமிருந்து விதவை ஓய்வூதியத்தைப் பெற்றார். பின்னர், இரண்டாவது திருமணத்திற்குப் பிறகும் அந்த ஓய்வூதியத்தை அவர் தொடர்ந்து பெற்றார். 1982ல் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடந்தபோது, திருமணமான பின்னரும் அவர் ஓய்வூதியம் பெறுவது தெரிய வந்ததால், அவருக்கு ஓய்வூதியம் வழங்குவதை அரசு நிறுத்தியது. இதனால் அந்த பெண் பணத்தை திரும்ப பெற விரும்பி கணவரை விவாகரத்து செய்து பின்னர் அரசிடம் விண்ணப்பித்து ஓய்வூதியம் பெற்றார்.

பின்னர், அரசுக்குத் தெரிவிக்காமல் அந்த நபரை மறுமணம் செய்து கொண்டதோடு, இந்த விஷயம் அரசுக்குத் தெரிய வந்ததும் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பெண் மீண்டும் கணவரை விவாகரத்து செய்து ஓய்வூதியம் பெற்றார்.அதேபோன்று அந்த பெண் தனது கணவரை 12 முறை விவாகரத்து செய்து 12 முறை மறுமணம் செய்துள்ளார். இப்படியே கிட்டத்தட்ட 43 வருடங்களாக விவாகரத்து செய்து 3 வருடங்களுக்கு ஒருமுறை மறுமணம் செய்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஓய்வூதியத்தை அரசு நிறுத்தியதால் கணவரை 13வது முறையாக விவாகரத்து செய்தார். பின்னர் அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது கணவன், மனைவி ஒன்றாக வாழ்வது தெரியவந்ததால் ஓய்வூதியத்தை அரசு முற்றிலுமாக நிறுத்தியதால் அந்த பெண்ணின் வழக்கை 2023-ம் ஆண்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மேலும் அந்த பெண்ணுக்கு வயது 73 என்பது குறிப்பிடத்தக்கது.  இதுவரை அந்த பெண் $3,42,000 ( இந்திய மதிப்பில் 3 கோடிக்கு மேல்) விதவை ஓய்வூதியமாகப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.