அரசியல் வரலாற்றிலியே பழனிசாமி போன்ற ஒரு எதிர்கட்சித் தலைவரை பார்த்ததில்லை - உதயநிதி தாக்கு.!
Seithipunal Tamil December 22, 2024 05:48 PM

பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கார் குறித்து பேசியதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் அம்பேத்கரை அமித்ஷா அவமதித்ததற்கு எதிராக நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதிமுகவிடம் இருந்து அது பற்றி பேச்சு மூச்சு கிடையாது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:- "பாராளுமன்றத்தில் அம்பேத்கரை மத்திய அமைச்சர் அமித்ஷா அவமதித்ததற்கு எதிராக நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதிமுகவிடம் இருந்து அது குறித்த பேச்சு மூச்சு கிடையாது. இது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டால், ஜெயக்குமார் நிலைபாடே தன்னுடைய நிலைபாடு என்று கூறினார். 

இப்படிப்பட்ட எதிர்கட்சி தலைவரை எங்கேயாவது பார்த்ததுண்டா. உலக அரசியல் வரலாற்றிலேயே இந்த மாதிரி ஒரு விளக்கத்தை யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். சரி ஜெயக்குமார் அப்படி என்ன கூறியுள்ளார் என்று பார்த்தால், அவர் அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது பாஜக-வுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்து இருந்தார். 

பாஜகவுக்கு நிச்சயம் பின்விளைவு ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு எப்பவோ தெரியும். அது அவர் சொல்லிதான் தெரிய வேண்டும் என்பது இல்லை. சமீபத்தில் அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட அந்தக் கூட்டத்தில் ஒன்றிய பாஜகவை எதிர்த்தோ, கண்டித்தோ ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை" என்றுத் தெரிவித்தார்.
 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.